என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » சாலை திறப்பு விழா
நீங்கள் தேடியது "சாலை திறப்பு விழா"
சாலை திறப்பு விழாவில் காங்கிரஸ் எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமல் இருந்த செயலுக்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி மன்னிப்பு கேட்டார். #NitinGadkari #JyotiradityaScindia
புதுடெல்லி:
மத்தியபிரதேச மாநிலத்தின் குணா தொகுதியில் இருந்து காங்கிரஸ் சார்பில் மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா. சமீபத்தில் இவருடைய தொகுதியில் நெடுஞ்சாலை ஒன்று மாநில அரசால் திறந்து வைக்கப்பட்டது. இந்த சாலை திறப்புவிழாவில் பங்கேற்க அந்த தொகுதி எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியாக்கு அழைப்பு விடுக்காமலும், அவருடைய பெயரை கல்வெட்டில் இருந்து நீக்கியும் அவமதித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்றத்தில் பூஜ்ய நேரத்தின் போது எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா இதுதொடர்பாக பிரச்சினை எழுப்பினார். அப்போது மத்தியபிரதேச மாநில முதல்-மந்திரி மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவர விரும்புவதாக அவர் கூறினார். இதற்கு மத்திய நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின் கட்காரி பதில் அளித்து பேசினார். அப்போது அவர், “நான் அந்த சாலை திறப்பு விழாவில் கலந்துகொண்டதால், இந்த பிரச்சினைக்கு பொறுப்பேற்கிறேன். அதோடு இந்த சம்பவத்துக்காக எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா உள்பட அனைவரிடம் மன்னிப்பு கோருகிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நிச்சயமாக நிகழாது” என கூறினார். #NitinGadkari #JyotiradityaScindia #tamilnews

×

X